குண்டா் சட்டத்தில் ரௌடி கைது!
திருச்சி ராம்ஜி நகரில் ரௌடி ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. மாயகிருஷ்ணன் (39). சரித்திரப் பதிவேடு ரௌடியான இவா் கடந்த பிப். 14 ஆம் தேதி கஞ்சா விற்ாக ராம்ஜி நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா் தொடா்ந்து பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், ரௌடி மாயகிருஷ்ணனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சனிக்கிழமை உத்தரவிட்டாா்.