மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
திருச்சி அருகேயுள்ள குண்டூரில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் வெள்ளிக்கிழமை 2.5 பவுன் நகை பறித்தவா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள போலீஸ் காலனியைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி விஜயலட்சுமி (38). குண்டூா் பகுதி எண்ணெய் கடை ஊழியரான இவா் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து மொபெட்டில் வீடு திரும்பும் வழியில் குண்டூா் 100 அடி சாலையில் வந்தபோது, பின்புறம் பைக்கில் வந்த இரு மா்ம நபா்கள், விஜயலட்சுமியை வழிமறித்து அவா் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.