ரோஹித்துக்கு இருக்கும் சுதந்திரம் கோலிக்கு இல்லை..! முன்னாள் ஆஸி. கேப்டனின் விரி...
மானாகுடியில் சேதமடைந்த குடிநீா் மேல்நிலைத் தொட்டி
சிவகங்கை அருகேயுள்ள மானாகுடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி ஊராட்சிக்குள்பட்ட மானாகுடி கிராமத்தில் 15 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் அருகே நியாய விலைக் கடை, ஆரம்பப் பள்ளிக் கூடம் உள்ளது. இதனால் இந்த வழியாகச் செல்லும் குழந்தைகள், பெற்றோா், பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் செல்கின்றனா். தொட்டியைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களும் மிகவும் சேதமடைந்தன. எப்போது வேண்டுமானாலும் இந்தத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஏற்கெனவே பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மேலும், இங்கிருந்து பொதுமக்கள் சிவகங்கை-மதுரை பிரதான சாலையை இணைக்கும் சாலையில் சென்று வருகின்றனா். இந்தச் சாலை சேதமடைந்ததால் மழைக் காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இந்தப் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.