சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!
நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி!
நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த வாரம் வெய்யில் கொளுத்திவந்த நிலையில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்பட்ட நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துச் சென்றதால் இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டனர்.
இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் மதியம் 12 மணியளவில் மழை பெய்யத் தொடங்கி தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு உள்பட அனைத்து அணைகளிலும் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருக்கிறது. மேலும் இன்று பெய்த மழையால் நீர்மட்டம் மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.