சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!
ரோஹித்துக்கு இருக்கும் சுதந்திரம் கோலிக்கு இல்லை..! முன்னாள் ஆஸி. கேப்டனின் விரிவான பேட்டி!
ஆர்சிபி அணியின் சூழ்நிலையால் விராட் கோலியால் ரோஹித் சர்மா அளவுக்கு சுதந்திரமாக விளையாட முடியவில்லை என முன்னாள் ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார்.
ஆர்சிபி அணி இதுவரை ஐபிஎல் கோப்பைகளை வெல்லாத அணியாக இருக்கிறது. ஆனால் அவர்களது ரசிகர்கள் சலைக்காமல் அந்த அணி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடரில் 8,004 ரன்கள் குவித்துள்ளார்.
ஆர்சிபியில் பந்துவீச்சு சுமாரக இருப்பதால் கோலி தனது ஆட்டத்தை மாற்ற வேண்டுமா? என்ற கேள்விக்கு ஃபின்ச் கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதிக ஸ்டிரைக் ரேட், அதிக ரிஸ்க்
ஜியோஸ்டார் எக்ஸ்பெட்ர் நிகழ்ச்சியில் பிடிஐ-க்கு அளித்த நேர்காணலில் ஃபின்ச் பேசியதாவது:
இந்தக் கேள்வியை நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், 700, 800 ரன்கள் எடுத்தால் மகிழ்ச்சியா அல்லது 400 ரன்கள் போதுமா? வேகமாக விராட் கோலியை விளையாடச் சொன்னால் அவரும் அதைச் செய்யத் தயார். ஆனால், அப்படி ஆடினால் ஸ்டிரைக் ரேட் உயரும், ரிஸ்க்கும் அதிகமாகும்.
அதனால், விராட் கோலி பெரிதாக மாற வேண்டியதில்லை. அநேகமாக அவரது வேகத்தை சிறிது அதிகரிக்கலாம். ஆனால், நான் ஒரு வாரத்தின் ஒவ்வொரு நாளும் கோலியின் ரன்களுக்காக காத்திருப்பேன்.
முதல் பதிலே அடித்து ஆட முடியாது
கோலி நின்று ஆடும்போது மற்றவர்கள் யாராவது அணியின் ஸ்கோரை உயர்த்தலாம்.
முதல் பந்தில் இருந்தே 200 ஸ்டிரைக் ரேட் இருக்கும்படி நினைக்கக்கூடாது. ஒரே அணியில் 7 பேட்டர்களும் இதைச் செய்ய வேண்டுமென நினைப்பது சாத்தியமற்றது.
ஒருவேளை அப்படி முயற்சிக்கும்போது நீங்கள் போட்டியில் இருந்து தோற்க நேரிடும்.
கடந்த 2 சீசன்களாக ஐபிஎல் போட்டி வேற லெவலுக்கு சென்று விட்டது என எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்கு அடித்தளம் அமைக்க விராட் கோலி மாதிரி ஒருவர் வேண்டும். கடைசிவரை பேட் செய்ய வேண்டும்.
ரோஹித்துக்கு இருக்கும் சுதந்திரம் கோலிக்கு இல்லை
ரோஹித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் கோலியை ஒத்திருந்தாலும் கடந்த காலங்களில் ரோஹித் மிக அதிரடியாக விளையாடுகிறார்.
ஏனெனில் ரோஹித்தைச் சுற்றியுள்ள வீரர்களைப் பாருங்கள். அவர் தொடக்கத்தில் அடித்தளம் அமைத்தால் போதும் மற்ற வீரர்கள் அதை வைத்து பெரிய ரன்களை குவிப்பார்கள்.
அதனால், ரோஹித் சர்மா வந்தவுடனேயே பேட்டினை சுழற்றி பல சிக்ஸர்கள் அடிக்கிறார். அதற்கு அந்த அணியில் உள்ள வீரர்களே முக்கியம்.
மும்பை அணியில் ஹார்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என அட்டகாசமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர் தவறு செய்தாலும் அதைச் சரிசெய்ய ஆள்கள் இருக்கிறார்கள்.
ஆர்சிபியை கோலி மட்டுமே காப்பாற்ற முடியாது
கோலி 150 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினாலே போதுமானது. அநேகமாக அவரது ஸ்டிரைக் ரேட் 140-150க்கு சென்றாலும் பிரச்னையில்லை.
எவ்வளவு முறைதான் விராட் கோலி ஆர்சிபி அணியை பள்ளத்தில் இருந்து தூக்கிக்கொண்டு வர முடியும். ஏனெனில் எல்லாரும் அவரைச் சுற்றியே விழுந்துக் கிடக்கிறார்கள்.
முன்னமே கூறியதுபோல டாப் 3 வீரர்களிடம் இருந்து ரன்கள் வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் சுதந்திரமாக விளையாட முடியும் என்றார்.