நிவின் பாலி - நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு!
கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல்; பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் விளையாடி வருகிறது.