தெலங்கானா சுரங்கத்தில் மற்றொரு உடல் கண்டுபிடிப்பு! ஒரு மாதத்தைக் கடந்த மீட்புப் ...
ரூ.30 லட்சத்திற்கு ஏலம் போன டிவிட்டர் இலச்சினை!
டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினை ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
தொழிலதிபர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி பிறகு அதற்கு எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். இதைத்தொடர்ந்து டிவிட்டரின் நீலநிற பறவை இலச்சினை(லோகோ) சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்டது.
திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்
254 கிலோ எடை கொண்ட இந்த லோகோ அண்மையில் ஏலம் விடப்பட்டது. அது ஏலத்தில் கிட்டதட்ட $35,000க்கு விற்கப்பட்டுள்ளது. அரியப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் ஆஆர் ஏல நிறுவனம் இதனை ஏலம் விட்டுள்ளது.
இருப்பினும் ஏலத்தில் டிவிட்டர் இலச்சினையை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் அதே ஏலத்தில் அரிய வகை ஆப்பிள்-1 கணினி $375,000க்கும், ஸ்டீவ் ஜாப்ஸ் (1976) கையொப்பமிட்ட ஆப்பிள் காசோலை $112,054க்கும் ஏலம்போனது.