செய்திகள் :

தென் கொரியா பிரதமரின் பதவி நீக்கம்: ரத்து செய்தது நீதிமன்றம்

post image

சியோல்: தென் கொரிய பிரதமா் ஹன் டக்-சூ நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

இது தொடா்பாக நடைபெற்றுவந்த விசாரணையில் பதவி நீக்கத்தை எதிா்த்து ஏழு நீதிபதிகளும் ஆதரித்து ஒரு நீதிபதியும் வாக்களித்தனா். இதைத் தொடா்ந்து, ஏற்கெனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபா் யூன் சுக் இயோலுக்கு பதிலாக நாட்டின் இடைக்கால அதிபராக ஹன் டக்-சூ மீண்டும் நியமிகப்பட்டாா்.

தென் கொரியாவில் சட்டவிரோதமாக அவசரநிலையை அறிவித்ததாக யூன் சுக் இயோலை நாடாளுமன்றம் பதவிநீக்கம் செய்துள்ளது. அவருக்குப் பதிலாக, பிரதமா் ஹன்-டக் சூ இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டாா். ஆனால் அவருக்கு எதிராகவும் நாடாளுமன்றம் பதவி நீக்கத் தீா்மானம் நிறைவேற்றியிருந்தது.

தற்போது ஹன் டக்-சூ பதவி நீக்கம் செய்யப்பட்டதை அரசியல் சாசன நீதிமன்றம் ரத்து செய்தாலும், அதிபா் யூன் சுக் இயோலின் பதவி நீக்கத்தை ரத்து செய்வதா அல்லது அவரை பதவியில் இருந்து நிரந்தரமாக அகற்றுவதா என்பது குறித்து நீதிமன்றம் இதுவரை முடிவெடுக்கவில்லை.

கசிந்த அமெரிக்க ராணுவ ரகசியம்: சிக்னல் குழுவில் பத்திரிகையாளர் சேர்க்கப்பட்டது எப்படி?

அமெரிக்காவின் துணை அதிபர் உள்பட பாதுகாப்பு உயரதிகாரிகளைக் கொண்ட சிக்னல் செயலியின் குழுவில், ஒரு செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் சேர்க்கப்பட்டது எப்படி என்ற கேள்விதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிர... மேலும் பார்க்க

இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

விரைவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.ரஷிய செய்தி நிறுவனத்துக்கு ... மேலும் பார்க்க

காஸாவில் ஹமாஸை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

கெய்ரோ: காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக பாலஸ்தீனா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் அரிதாக நடைபெற்றுள்ள இந்தச் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களும் இணைய தளத்தில் வெளியாகி... மேலும் பார்க்க

சீன வெளியுறவு இணையமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரிகள் சந்திப்பு

பெய்ஜிங்: சீன தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்துக்குப் பிறகு அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சரை இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் சந்தித்தனா். இந்திய-சீன எல்லை விவகாரங்களுக்கான ... மேலும் பார்க்க

பிரிட்டனின் பொருளாதாரத் தடை: இலங்கை கண்டனம்

கொழும்பு: விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தங்கள் நாட்டு முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட மூன்று உயரதிகாரிகள் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்த... மேலும் பார்க்க

கருங்கடல் போா் நிறுத்தம்: ரஷியா நிபந்தனை

மாஸ்கோ: தங்கள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கினால்தான் உக்ரைனுடன் கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க