செய்திகள் :

சீன வெளியுறவு இணையமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரிகள் சந்திப்பு

post image

பெய்ஜிங்: சீன தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்துக்குப் பிறகு அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சரை இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் சந்தித்தனா்.

இந்திய-சீன எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புப் பணிக் குழுவின் (டபிள்யூஎம்சிசி) 33-ஆவது கூட்டம் பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிழக்கு ஆசிய நாடுகளுக்கான இந்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலா் கௌரங்கலால் தாஸ் தலைமையிலான இந்திய குழு இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் பங்கேற்றது.

தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ளவும் பரஸ்பர நலனுக்கு எல்லையில் அமைதியை வலுப்படுத்துவது என்றும் இரு நாடுகளும் இக்கூட்டத்தில் ஒப்புக்கொண்டன.

மேலும், எல்லைச்சூழல் குறித்தும் எல்லைதாண்டிய ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை மீண்டும் விரைவாகத் தொடங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சீன வெளியுறவு இணையமைச்சா் ஹாங் லீயை இந்திய வெளியுறவு அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளனா். இந்தியா-சீனா உறவுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைச்சூழல் மற்றும் பிற பிரச்னைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ரஷியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கிடையே பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்தித்துக் கொண்ட பிறகு இரு நாட்டு உறவில் முன்னேற்றம் காணப்படுகிறது.

பாங்காக் நிலநடுக்கம்: உயிரிழப்பு 17-ஆக உயர்வு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து இன்று(மார்ச் 30) பாங்காக் பெருநகர அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: பாங்க... மேலும் பார்க்க

மியான்மருக்கு மேலும் 60 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு: வெளியுறவு அமைச்சகம்

புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து ‘ஆபரேசன் பிரம்மா’ பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மியான்மருக்கு இந்திய விமானப்படையின் இரண்டு சி - 17... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்: பிணைக்கைதிகள் விடுவிப்பு - ஹமாஸ்

கெய்ரோ: இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்; பிணைக்கைதிகளை விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் தரப்பிலிருந்து சனிக்கிழமை(மார்ச் 29) தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்ரேல் - ஹமாஸ் இடையிலான சண்டைக்கு முற்றுப்புள்ளி ... மேலும் பார்க்க

‘ஆட்சிக் கவிழ்ப்பு’ சதித் திட்டம்: ஷேக் ஹசீனா மீது வழக்கு!

வங்கதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஏற்கெனவே இடஒதுக்கீடு சீா்திருத... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இ... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, இந்தியா - அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தை புது தில்லியில் ச... மேலும் பார்க்க