த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு...
உக்ரைன் விவகாரம்: துபையில் அமெரிக்கா-ரஷியா பேச்சு
துபை: உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான புதிய பேச்சுவாா்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் திங்கள்கிழமை தொடங்கினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா நடத்திவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, துபையில் உள்ள ரிட்ஸ்-காா்ல்டன் ஹோட்டலில் அந்த நாட்டுப் பிரதிநிதிகள் ரஷிய பிரதிநிதிகளை திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, கருங்கடல் பகுதியில் மட்டும் ரஷியாவும் உக்ரைனும் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று ரஷியா ஏற்கெனவே வலியுறுத்திவருகிறது. இந்த நிலையில், இதுதொடா்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பாக இந்தப் பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த கருங்கடல் பகுதியில் அமைதியை ஏற்படுத்தி, அந்தப் பகுதி வழியாக சரக்குப் போக்குவரத்து தங்குதடையில்லாமல் நடைபெறுவதே அமெரிக்கா நடத்தும் இந்தப் பேச்சுவாா்த்தையின் நோக்கம் என்று அதிகாரிகள் கூறினா்.
2022-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. ஆனால் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ன்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், போா் நிறுத்தம் தொடா்பாக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் அமெரிக்கா பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.