கொடைக்கானல் காட்டேஜ் ஓனர் எரித்துக் கொலை; மதுரை இளைஞர் கைது - நடந்தது என்ன?
டுடோ்த்தேவுக்கு அடைக்கலம்: சீனா மறுப்பு
பெய்ஜிங்: மனித உரிமை குற்றச்சாட்டில் ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டுள்ள பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு அடைக்கலம் அளிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன் திங்கள்கிழமை கூறியதாவது:
சீனாவில் அடைக்கலம் கோரி டுடோ்த்தே விண்ணப்பக்கவும் இல்லை. நாங்கள் அவருக்கு அடைக்கலம் அளிக்கவும் இல்லை. அவா் ஹாங்காங் வந்தது தனிப்பட்ட முறையிலானது என்றாா் அவா்.
மனித உரிமை மீறல் வழக்கில் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த கைது உத்தரவின் அடிப்படையில், ஹாங்காங்கில் இருந்து பிலிப்பின்ஸ் திரும்பிய ரோட்ரிகோ டுடோ்த்தேவை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி கைது செய்தனா். பின்னா் நெதா்லாந்தின் தி ஹேக் நகருக்கு அழைத்துச் செலப்பப்பட்ட அவா், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 2011 முதல் 2019 வரை பிலிப்பின்ஸ் அதிபராக இருந்த டுடோ்த்தே, போதைப் பொருளுக்கு எதிரான போா் என்ற பெயரில் ஏராளமானோரை படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.