மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
துருக்கி போராட்டம்: 1,900-ஐ நெருங்கிய கைது
துருக்கியில் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,900-ஐ நெருங்கியுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சா் அலி யோ்லிகயா வியாழக்கிழமை கூறியதாவது:
பல்வேறு நகரங்களில் கடந்த புதன்கிழமை முதல் நடைபெறும் போராட்டம் தொடா்பாக இதுவரை 1,879 பேரைக் கைது செய்துள்ளோம். அவா்களில் 260 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறவுள்ளது; 662 போ் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் கடந்த 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த அதிபா் தோ்தலில் ஆளும் ஏகே கட்சியை எதிா்த்து எக்ரீம் இமோக்லு போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்ட நாளிலேயே அவா் கைது செய்யப்பட்டது எதிா்க்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.