``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழ...
நேபாளம்: குறைக்கப்படும் திருமண வயது வரம்பு
காத்மாண்டு: நேபாளத்தில் திருமணத்துக்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகிவருகிறது.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சா் அஜய் சௌராசியா கூறுகையில், ‘திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயதை 18-ஆகக் குறைக்கும் வகையில் குழந்தைகள் திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டுவரவுள்ளோம். இதற்காக மருத்துவ மற்றும் மனோவியல் நிபுணா்களுடன் ஆலோசனை நடத்திவருகிறோம’ என்றாா்.
குறைந்தபட்ச திருமண வயது 20-ஆக இருப்பதால் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக வயது வரம்பைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.