செய்திகள் :

``திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள்" - அன்புமணி அடுக்கும் புள்ளிவிவரங்கள்!

post image

`குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு' - அன்புமணி

கடந்த சில நாள்களாக, தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"மதுரை அருகே திமுக நிர்வாகியின் உறவினர் வெட்டிக் கொலை: சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியைக் கூட தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்குகிறது திமுக அரசு.

அன்புமணி ராமதாஸ்

`படுகொலைகள் நடக்காத நாளே இல்லை'

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரவுடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சிறையில் சதித்திட்டம்..?

கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் மதுரை மாநகர திமுக நிர்வாகி வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காளீஸ்வரனுக்கும், அவரது எதிர் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்த படியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் தெரிகிறது.

`திமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது..'

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட, சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு

ஒரு நாளைக்கு சராசரியாக 4 படுகொலைகள்

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார். இதுக்குறித்து தனது... மேலும் பார்க்க

``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம்... மேலும் பார்க்க

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க

Parliament: பதாகைகளை ஏந்தி எதிக்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீர... மேலும் பார்க்க