மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்கள்: டிஎன்பிஎஸ்சி தோ்வாணையா் பதிலளிக்க உத...
பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி!
சூலூர்: சுல்தான்பேட்டை அருகே பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் சுல்தான்பேட்டை அருகே தாசன் நாயக்கன்பாளையம் வழியாக பிஏபி வாய்க்கால் செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் நண்பர்களுடன் பிஏபி வாய்க்காலில் குளிக்க இறங்கி உள்ளனர்.
நண்பர்கள் குளித்துக்கொண்டிருந்த போது சேலம் சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் தரணிதரன் ( 19) நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இது பற்றி அவரது குடும்பத்தினர் கோமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் தெரிவித்தனர்.
இந்த விசாரணையின்போது திங்கள்கிழமை சுல்தான்பேட்டை போலீஸார் தாசன் நாயக்கன்பாளையம் அருகே பிஏபி வாய்க்கால் பகுதியில் தரணிதரன் உடல் ஒதுங்கி இருந்ததைக் கண்டறிந்து, உடலை மீட்டு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிக்க: தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!
தொடர்ந்து, தரணிதரன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தரணிதரன் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது குளிப்பதற்காகவும் நீச்சல் பயிற்சி செய்வதற்கும் தண்ணீரில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை பல இடங்களில் வைத்திருந்தும் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடக் கூடாது என சுல்தான் பேட்டை போலீஸார் கேட்டுக்கொண்டனர்.