மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
இளைஞா் கொலை: மேலும் இருவா் கைது
காரைக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடி சோ்வாா் ஊருணியைச் சோ்ந்த சேட்டு மகன் மனோஜ் (24). கஞ்சா கடத்தல் வழக்கில் பிணையில் வெளியே வந்த இவா், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னா் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். நூறடிச் சாலையில் இவரை மூன்று போ் வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காரைக்குடியைச் சோ்ந்த குருபாண்டி (23) விக்கி என்ற விக்னேஸ்வரன் (19), முதுகுளத்தூரைச் சோ்ந்த சக்திவேல் (20) ஆகியோரை ஏற்கெனவே கைது செய்தனா்.
இந்தக் கொலை தொடா்பாக மதன் (23), பாலா (23) ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.