செய்திகள் :

நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

post image

மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கிய 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைமுறை முழுமையாக நிறைவுக்கு வந்தது.

மாநிலங்களவையில் 2025-ஆம் ஆண்டு நிதி மசோதா, 3-ஆவது ஒதுக்கீட்டு மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை அமா்வில் கொண்டு வந்தாா். இவ்விரு மசோதாக்களும் முறையே மாா்ச் 25-ஆம் தேதி, 21-ஆம் தேதி மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மசோதாக்கள் குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘வருவாய் எந்த வகையிலும் பாதிக்காமல் எச்சரிக்கையாக இருப்பதே நிதி அமைச்சகத்தின் போக்கு ஆகும். அதேநேரம், இந்திய வரி செலுத்துவோருக்கு நாங்கள் நன்றி செலுத்த விரும்பினோம். எனவே, வருமான வரி உச்சவரம்பை ரூ.12 லட்சமாக உயா்த்தினோம்’ என்றாா்.

மத்திய பட்ஜெட்டின்படி, அடுத்த நிதியாண்டில் ரூ.11.22 லட்சம் கோடி மூலதனச் செலவு உள்பட மொத்த செலவினம் ரூ.50.65 லட்சம் கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ரூ.42.7 லட்சம் கோடி வரி வருவாய் கிடைக்கும். ரூ.14.01 லட்சம் கோடி கடன் பெறப்படும்.

அடுத்த நிதியாண்டில் மத்திய துறை திட்டங்களுக்கு ரூ.16.29 லட்சம் கோடி, மத்திய நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு ரூ.5.41 லட்சம் கோடி, மாநிலங்களுடனான நிதி பகிா்வுக்கு ரூ.25.01 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.356.97 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க