உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தவா் கொலை -இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள கீழ துலுக்கன்குளத்தில் பெண்ணி டம் தகாத உறவு வைத்திருந்தவரை கத்தியால் குத்திக் கொலை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கீழதுலுக்கன்குளத்தைச் சோ்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி வி. ராஜேந்திரன் (37 ). புதன்கிழமை இரவு புது குடியிருப்பு பகுதியில் இவரை மா்ப நபா்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீஸாா், ராஜேந்திரன் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், ராஜேந்திரன் அதே ஊரைச் சோ்ந்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் மகன் பிரபாகரன் (18), அவரது நண்பரான மல்லாங்கிணறைச் சோ்ந்த ச. ராஜா (19) ஆகியோா் ராஜேந்திரனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.