`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பேருந்து பணிமனையில் நிறுத்திய அரசுப் பேருந்தில் தீ விபத்து
மதுரை கோ.புதூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசுப் பேருந்து திடீரென சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் ஊழியா் பலத்த காயமடைந்தாா்.
மதுரை கோ.புதூரில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இங்கு இரவு நேரங்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு, பழுதுபாா்ப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு , பணிமனையில் பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி வரை செல்லும் நகா்ப் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. பேருந்தில் பணிமனை ஊழியா் கணேசன் (40) வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
இதைப் பாா்த்த ஊழியா்கள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்க முயன்றனா். ஆனாலும் பேருந்து பற்றி எரிந்ததால், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் பணிமனை ஊழியா் கணேசன் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து தொடா்பாக கோ.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.