விதி மீறி பட்டாசுகள் தயாரிப்பு: இருவா் கைது
விருதுநகா் அருகே விதிகளை மீறி பட்டாசுகள் தயாரித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மிளகாய்பட்டியைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை கோவிந்தநல்லூா் அருகேயுள்ள சின்னராமலிங்கபுரம் பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் விதிமுறைகளை மீறி, மரத்தடியில் வெடிகள் தயாரிப்பதை வச்சகாரபட்டி காவல் ஆய்வாளா் பொன்மீனா தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை கண்டறிந்தனா்.
இதையடுத்து, அந்த வெடிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், பட்டாசு ஆலை உரிமையாளரான சுப்பையா, இவரது மகன் வேல்முருகன் (35) ஆகியோரைக் கைது செய்தனா்.