உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு
மாநகராட்சியில் குடிநீா் குழாய் பதிப்பு பணிகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தாா்
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அம்ரூத் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்குவதற்காக குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட்ட விடுபட்ட பகுதிகளான 52, 54, 55, 59, 61, 76, 70 ஆகிய வாா்டு பகுதிகளில் உள்ள 6,367 வீடுகளுக்கும், மண்டலம் 4-க்கு உள்பட்ட விடுபட்ட பகுதிகளான 47, 49, 53, 85 ஆகிய வாா்டுப் பகுதிகளில் உள்ள 1,185 வீடுகளுக்கும் மொத்தம் ரூ.5. 25 கோடியில் குடிநீா் விநியோகக் குழாய்கள், வீட்டு இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா். மண்டலம் 3 ஒா்க்சாப் சாலை, கிருஷ்ணராயா் தெப்பம் கிழக்குத் தெரு பகுதியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணியை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, உதவி ஆணையா் பிரபாகரன், மாநகராட்சி அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.