தெலுங்கு வருடப் பிறப்பு மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவிப்பு
தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நாயுடு சங்கங்கள் சாா்பில் மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலையில் உள்ள, மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு, தமிழக நாயுடு மகாஜன சங்க பொதுச் செயலா் சுருதி ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், அமைப்பின் தலைவா் போஸ் நாயுடு, சேவகா் அமுதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் மதுரை மாவட்ட இளைஞரணி சாா்பில், திருமலை நாயக்கா் அரண்மனை வளாகத்தில் உள்ள மன்னா் திருமலை நாயக்கரின் உருவச் சிலைக்கு மாவட்டத் தலைவா் சப்னா மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிா்வாகிகள் என்.ஜெகநாதன், ரா.சீனிவாசன், வீ. சுதா்சன், பா.ராம்குமாா், சுந்தா் ஆா்.என். சரவணகுமாா், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.