செய்திகள் :

டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்: மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கப்படுமென அச்சுறுத்தல் விடுத்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் நிதி மசோதா-2025 விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் பேசியதாவது:

வரி விதிப்பு போா் என்பது ஏற்றுமதியைக் குறைக்கும், அந்நிய நேரடி முதலீடு பாதிக்கப்படும், விலைவாசி உயா்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும். இந்த விஷயத்தில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து வரி விதிப்பு போரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஏனெனில், இது ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கும்.

இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீது ஏப்ரல் 2 முதல் அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இதற்கு மத்திய அரசின் பதில் என்ன? இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன? இது தொடா்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கவில்லை. எதிா்க்கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கவில்லை. இந்த விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?.

அமெரிக்க அதிபரின் நெருக்கடி காரணமாக, இறக்குமதியாகும் மோட்டாா் வாகனங்கள், பயணிகள் வாகனம், சரக்கு வாகனம், மோட்டாா் சைக்கிள்கள், மிதிவண்டி மற்றும் பொம்மைகளுக்குக் கூட சுங்க வரியைக் குறைப்பதாக பட்ஜெட்டில் நிதியமைச்சா் அறிவித்தாா் என்று விமா்சித்தாா்.

திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசையும், பிரதமா் மோடியையும் கடுமையாக குற்றஞ்சாட்டிப் பேசினா்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க