சிசுவின் பாலினம் தெரிவித்தால் குண்டா் தடுப்புச் சட்டம் பாயும்
ஓடிடியில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்!
நடிகை லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்து, தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த இவர், தற்போது யூடியூபர் ஹரி பாஸ்கருடன் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை எமி ஜாக்சன்! என்ன பெயர் தெரியுமா?

மேலும், இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரயானும் நடித்துள்ளார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படமாக இப்படம் வெளியானது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் இன்று(மார்ச் 25) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.