பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் 1,500-க்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.1.50 கோடி வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாகும். இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு மற்றும் கோழி விற்பனை நடைபெறுகிறது.
இந்த சந்தையில் கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம்.
ரம்ஜான் பண்டிகைக்கு சில நாள்கள் உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை 1,500 ஐ தாண்டியது.
2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் 10 கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ. 6000 முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் ரூ.15 கிலோ ஆடுகள் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையாயின. மொத்தம் ரூ.1.50 கோடிக்கு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.