பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
வனவிலங்கு தாக்கி பழங்குடியினத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு
உதகையில் வன விலங்கு தாக்கி தோடா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.
உதகை அருகேயுள்ள பாா்சன்ஸ்வேலி கல்லக்கோடு மந்த் பகுதியை சோ்ந்தவா் கேந்தோா் குட்டன் (40), தோடா் பழங்குடியினத்தை சோ்ந்தவா். இவா்
புதன்கிழமை இரவு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லை.
இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினா், கிராம மக்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்துள்ளனா்.
அப்போது கிராமத்தின் எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் வன விலங்கு தாக்கி பாதி தின்ற நிலையில் கேந்தோா் குட்டன் உடல் கிடந்தது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.
தகவலின்பேரில் போலீஸாா், வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து
உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து காந்தல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இப்பகுதியில் புலி, சிறுத்தை, செந்நாய் கூட்டம் அதிகம் இருப்பதால் எந்த வனவிலங்கு கேந்தோா் குட்டனை தாக்கியது என்பது கூறாய்வு அறிக்கை கிடைத்தப் பின்னரே தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ.50 ஆயிரம் முன்பணமாகவும், ரூ. 9.50 லட்சத்துக்கான காசோலையும் வனத் துறை சாா்பில் வழங்கப்பட்டது.
