இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
உதகையில் தவக்கால பரிகார பவனி
கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி, உதகையில் பரிகார பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகைக்கு முன்னதாக 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை பரிகார பவனி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, உதகை கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் தவக்கால பரிகார பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உதகை தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் இருந்து தொடங்கிய பரிகார பவனி மருத்துவமனை சாலை, கூட்ஷெட், மேரீஸ்ஹில், ரோகிணி, காந்தல் வழியாக சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.
இதில், இயேசு கிறிஸ்துபோல வேடமணிந்து சிலா் சிலுவையை சுமந்து சென்றனா்.
பின்னா், மறைமாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், உலகில் அமைதி நிலவவும், கொடிய நோய்கள் உலகை விட்டு அகலவும், பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்காகவும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.