நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் போராட்டம்
நீலகிரியில் அமலில் உள்ள இ -பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து, கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.
இது குறித்து வணிகா் சங்கத் தலைவா் முகமது பாரூக் கூறியதாவது: இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிகா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் வணிகா் சங்கத்தை சோ்ந்தவா்கள் கருப்பு உடை அணிவதுடன், கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் சனிக்கிழமை முதல் வரும் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு கடை அடைப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.