`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
நீலகிரி மாவட்ட வணிகா் சங்கங்களின் கருப்புக் கொடி போராட்டம் வாபஸ்
நீலகிரியில் அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற கருப்புக் கொடி போராட்டம் ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கருப்பு சட்டை அணிவதுடன், கடை , வீடுகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கியது.
ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா முன்னிலையில் வணிகா்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுடனான பேச்சுவாா்த்தை உதகையில் உள்ள கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வணிகா் சங்க பேரமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவா் முகமது பரூக் கூறியதாவது: மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க கருப்புக் கொடி மற்றும் கருப்பு சட்டை போராட்டத்தை மட்டும் வாபஸ் பெறுகிறோம்.
திட்டமிட்டபடி ஏப்ரல் 2-ஆம் தேதி முழு கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்றாா்.