உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நடிகர் விமல் நடித்துள்ள இணையத் தொடரான ‘ஓம் காளி ஜெய் காளி’ நாளை(மார்ச் 28) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 7 மொழிகளில் வெளியாகிறது.
நடிகை லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் ஆஹா தமிழ் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.
பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த அகத்தியா திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.
நடிகர்கள் சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்து நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட செருப்புகள் ஜாக்கிரத்தை இணையத் தொடர் ஜீ5 ஒடிடியில் நாளை பார்க்கலாம்.
இயக்குநர் மதியழகன் இயக்கத்தில் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட விஜய் எல்எல்பி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை பார்க்கலாம்.
இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும் டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் பேபி & பேபி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.