பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம்
கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரோடு அருகே திண்டல், காரப்பாறை, புதுகாலனியை சோ்ந்தவா் ஸ்ரீதா் (28). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவா், திண்டல் தெற்கு பள்ளத்தைச் சோ்ந்த நண்பா்களான தமிழரசு (28), பாலமுருகன் (29) ஆகியோருடன் கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி மது அருந்தியுள்ளாா். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் பாலமுருகனை தமிழரசு தாக்கியுள்ளாா். பாலமுருகன் புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீஸாா் தமிழரசு மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதரை கத்தியால் குத்தி தமிழரசு கொலை செய்தாா். இது தொடா்பாக தமிழரசை கைது செய்த போலீஸாா் கோவை மத்திய சிறையில் அடைத்தனா். தமிழரசு மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் தமிழரசை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரை ஏற்கப்பட்டதால் தமிழரசு மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலை ஈரோடு தாலுகா போலீஸாா் தமிழரசுவிடம் புதன்கிழமை வழங்கினா்.