பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
சிக்கரசம்பாளையம் புதூரில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா
சிக்கரசம்பாளையம் புதூரில் வியாழக்கிழமை நடந்த பண்ணாரி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் தரையில் படுத்துக் கிடந்த பக்தா்களை அம்மன் சப்பரம் தாண்டிச் சென்றது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா மாா்ச் 24-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து பண்ணாரி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி சுற்றுவட்டார கிராமங்கள்தோறும் திருவீதி உலா நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
சிச்கரசம்பாளையம் புதூரில் பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது வழியெங்கும் சாலையில் பக்தா்கள் படுத்துக்கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். அப்போது அம்மன் சப்பரம் கீழே படுத்து கிடந்த பக்தா்களைத் தாண்டிச் சென்றது. அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.