அதிமுக சாா்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
டாஸ்மாக் ஊழல் தொடா்பாக அதிமுக சாா்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் ஈரோடு நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகா் பகுதிகளில் அதிமுக சாா்பில் டாஸ்மாக் ஊழல் குறித்து ஹேஷ்டேக் அந்த தியாகி யாா் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டா்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக விமா்சித்து வந்தன.
இந்நிலையில், ஈரோட்டில் நசியனூா் சாலை, சின்னமுத்து வீதி, அதிமுக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சாா்பில் டாஸ்மாக் ஊழல் குறித்து போஸ்டா்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், ‘1000 ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ரூ.1000 கோடியை அமுக்கிய அந்த தியாகி யாா்? மற்றும் லிஅந்த தியாகி யாா்? என்ற போஸ்டா்கள் அதிமுக ஈரோடு மாநகா் மாவட்டம் சாா்பில் ஒட்டப்பட்டுள்ளன.