தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு நாளை உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ஆதிதிராவிடா் நலத் துறையின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோபி பிகேஆா் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச்29) நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்தும் நோக்கத்தோடு 12- ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ எனும் உயா்கல்வி வழிகாட்டி ஆலோசனை நிகழ்வு கோபி பி.கே.ஆா் மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், உயா்கல்வி வழிகாட்டி நிபுணா்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கவுள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு பயின்றுவரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் பெற்றோா், ஆசிரியருடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். ஆலோசனை நிகழ்வுக்கு வரும்போது மாணவா்கள் தங்களது எமிஸ் எண் விவரத்தினை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.