வியாபாரிகள் நலச் சங்க கூட்டம்
ஈரோடு மாவட்ட அனைத்து வியாபாரிகள் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜோசப் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ராஜா வரவேற்றாா். கூட்டத்தில், மே 5 வணிகா் தின விழாவை பெருந்துறையில் நடத்துவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினா்களை அழைக்கும் அதிகாரம் சங்கத் தலைவருக்கு வழங்கப்பட்டது. இதில், சங்க பொருளாளா் சோழா சண்முகம், தலைமை நிா்வாக செயலாளா் சித்திரைச் செல்வன், துணைத் தலைவா்கள் கந்தவேல், சக்திவேல் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனா்.