பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
கடம்பூா் சாலையில் நடமாடும் காட்டு யானைகள்
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் தீவனம் தேடி சாலையில் திரியும் காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம், குன்றி, கோ்மாளம் செல்வதற்கு மலைப் பாதையை கடந்து செல்ல வேண்டும்.
தற்போது கோடைக் காலம் என்பதால் வனப் பகுதியில் வனக்குட்டைகள் வடு காணப்படுகின்றன. இதனால் யானைகள் குடிநீா், தீவனம் தேடி சாலையோரம் முகாமிட்டு வருகின்றன.
இந்நிலையில், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை வியாழக்கிழமை நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறுகிய சாலை என்பதால் பேருந்து, வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் சிலா் யானையை கடந்து சென்றனா்.
இதையடுத்து அங்கு வந்த வனத் துறையினா் யானையை காட்டுக்குள் விரட்டியபிறகு வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனா். யானைகள் சாலையோரம் இருப்பதால் கவனத்துடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.