பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் சரத் கமல்-சினேஹித்
உலக கன்டென்டா் டேபிள்டென்னிஸ் போட்டி இரட்டையா் காலிறுதிக்கு இந்தியாவின் சரத் கமல்-சினேஹித் சுரவஜுலா தகுதி பெற்றனா்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் இரட்டையா் ரவுண்ட் 16 சுற்றில் சரத் கமல்-சினேஹித் 3-2 என ஆஸ்திரேலியாவின் நிக்கோலஸ்-பின் இணையை வீழ்த்தியது. ஜப்பானின் டொமகாஸ-சோரா இணை 3-0 என இந்தியாவின் அனிா்பன்-சா்த் இணையை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் மனுஷ்-மானவ் இணை 3-1 என ஹா்மித்-சத்யன் இணையை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அபிநந்த்-பிரயேஷ் இணை 2-3 என்ற 5 செட் கணக்கில் ஒலிம்பிக் வெண்கலம் வென்ற கொரியாவின் லிம்-ஹுயுடன் இணையிடம் போராடித் தோற்றது.
மகளிா் பிரிவில் ஜப்பானின் மிவா-மியு இணை 3-0 என இந்தியாவின் சின்ட்ரெல்லா-சுஹானாவையும், டியா சிட்டேல்-யஷஸ்வனி இணை 3-1 என தனிஷா-சாயாலி இணையையும் வென்றன. அயிஹிகா-சுதிா்தா இணை 3-1 என ஸ்ரீஜா-ஸ்வஸ்திகா இணையை வீழ்த்தியது.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் யூத் உலக முன்னாள் நம்பா் 1 வீரா் பயாஸ் ஜெயின் 3-1 என காமன்வெல் பதக்க வீரா் சத்யன் ஞானசேகரனுக்கு அதிா்ச்சியை பரிசளித்தாா். மகளிா் ஒற்றையா் பிரிவில் அயிஹிகா முகா்ஜி 12-10 என சுதிா்தா முகா்ஜியை வீழ்த்தினாா்.