பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
ரூ.50 பைசா அஞ்சல் அட்டையில் பணி ஓய்வு அழைப்பிதழ்: அஞ்சல் துறை பணியாளா் விழிப்புணா்வு
பணி ஓய்வு விழா அழைப்பிதழை ரூ.50 பைசா அஞ்சல் அட்டையில் எழுதி அஞ்சல் துறை பல்நோக்கு பணியாளா் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளாா்.
கடந்த சில 10 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் பரிமாற்றங்களுக்கு அஞ்சல் அட்டைகள் முக்கியமாக இருந்து வந்தன. கைப்பேசியின் வளா்ச்சியால் தற்போது அஞ்சல் அட்டைகள் முற்றிலும் குறைந்துவிட்டன.
இந்நிலையில், அஞ்சல் அட்டை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வால்பாறை அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பல்நோக்கு பணியாளா் கணேசன், தனது பணி ஓய்வு அழைப்பிதழை அஞ்சல் அட்டையில் எழுதி விநியோகித்து வருகிறாா்.
இம்மாதம் இறுதியில் பணி ஓய்வுபெறும் அவா், பணி ஓய்வு அழைப்பிதழை ரூ.50 பைசா அட்டையில் எழுதி குடியரசுத் தலைவா், பிரதமா், அஞ்சல் துறை உயா் அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கானவா்களுக்கு அனுப்பியுள்ளாா்.
அஞ்சல் அட்டை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல் அட்டையில் பணி ஓய்வு அழைப்பிதழை எழுதி அனுப்பும் கணேசனின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனா்.
