செய்திகள் :

"கேரளாவில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வருவேன்" - மாநிலத் தலைவராகப் பதவியேற்ற ராஜீவ் சந்திரசேகர் உறுதி

post image

கேரள மாநில பா.ஜ.க தலைவராக 5 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்தார் கே.சுரேந்திரன். அவரது பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கேரள மாநில பா.ஜ.க தலைவராக ராஜீவ் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநில பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பிரஹ்லாத் ஜோசி புதிய தலைவராக ராஜீவ் சந்திரசேகரை அறிவித்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய கேரள மாநில தேர்தல் பொறுப்பாளர் பிரஹ்லாத் ஜோசி கூறுகையில், "ஏற்கனவே மாநிலத் தலைவராக இருந்த கே.சுரேந்திரன் கேரளாவில் பா.ஜ.க-வின் வாக்குவங்கியை 20 சதவிகிதமாக உயர்த்திக்காட்டினார்.

ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் பா.ஜ.க கேரளா மாநிலத்தில் அதிகாரத்தில் அமரட்டும்" என்றார்.

மாநிலத் தலைவராகப் பதவியேற்றபின் ராஜீவ் சந்திரசேகர் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், "கடந்த சுமார் நான்கு மாதங்களாகக் கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. என்னை மாநிலத் தலைவராக மத்தியத் தலைமை நியமித்துள்ளது.

அனைத்து நிர்வாகிகளின் பெயரில் நான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

கேரள மாநில பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர்

எத்தனையோ மாநிலத் தலைவர்களின் பணிகளாலும், கட்சிக்காக உயிர்நீத்தவர்களின் தியாகங்களும்தான் கேரளாவில் கட்சி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை மறக்கக்கூடாது.

பா.ஜ.க என்பது தொண்டர்களின் கட்சி. கேரளா மாநில நிர்வாகிகளின் சக்தியை நாடாளுமன்றத் தேர்தலில் அறிந்துகொண்டேன். 35 நாட்கள் நடந்த பிரசாரத்தில் எனக்கு மூன்றரை லட்சம் வாக்குகள் பெற்றுத்தந்தனர்.

கேரளா ஏன் பின்னோக்கிப் போகிறது, எதற்காகக் கடன் சுமை அதிகரிக்கிறது. இளைஞர்கள் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வெளியே போகும் நிலைதான் உள்ளது.

இங்கிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கர்நாடகாவில் நிறையத் தொழில்கள் நடக்கின்றன. கேரளாவில் தொழிற்சாலைகள் ஏன் தொடங்கப்படவில்லை என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் நான் வாக்கு கேட்கப் போகும்போது சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகள் வாக்குறுதிகள் தருகிறார்கள் ஒன்றுமே செய்வதில்லை என மக்கள் ஆதங்கப்பட்டார்கள்.

மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். கேரளா வளர வேண்டும், நம் குழந்தைகளுக்கு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ராஜீவ் சந்திரசேகருக்கு ஆளுயரமாலை அணிவிக்கப்பட்டது

2014-ல் நரேந்திர மோடி பிரதமர் ஆகும்போது இதே பிரச்னை இந்தியாவுக்கு இருந்தது. நரேந்திர மோடி மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுபோன்ற ஒரு மாற்றத்தைக் கேரளாவிலும் கொண்டுவருவோம்.

உலக அளவில் மாற்றம் வரும் காலம் இது. ஒரு மாநிலத்தில் வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் இருந்தால் அங்குள்ள இளைஞர்கள் வேறு இடங்களுக்குப் போவார்கள். எனவே நோக்கு கூலி உள்ள கேரளம் நமக்கு வேண்டாம்.

தொழில், கல்வி, உற்பத்தி ஆகிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் கேரளா நமக்கு வேண்டும். நம் மாநிலத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் வளர்ச்சி என்ற திட்டத்தை அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் முன்னேற்றம், வளர்ச்சியின் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

நம் பிரதமரின் லட்சியத்தைச் செயல்படுத்த என்.டி.ஏ அரசு அதிகாரத்துக்கு வரவேண்டும். கேரளாவில் பா.ஜ.க-வை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்ற லட்சியம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதை நிறைவேற்றிவிட்டே நான் இங்கிருந்து போவேன். திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு அகமதாபாத்தில் பிறந்த நான் 18 ஆண்டுகளாக ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தேன்.

இப்போது புதிய பொறுப்பை ஏற்றெடுக்கும்போது என் முழு நேரத்தையும் கேரளாவுக்காகச் சமர்ப்பிக்கிறேன். அனைவரின் ஆதரவையும், அன்பையும், ஆசியையும் வேண்டுகிறேன்" என்றார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

கழுகார்: கொலை வழக்கில் எம்.எல்.ஏ-வின் பி.ஏ? டு ‘நோஸ் கட்’ செய்த டெல்லி மேடம்..!

கொதிக்கும் உடன்பிறப்புகள்!கொலை வழக்கில் எம்.எல்.ஏ-வின் பி.ஏ?தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில், அரசியல் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த... மேலும் பார்க்க

சுஷாந்த் சிங் செயலாளர் திஷா தற்கொலையில் ஆதித்ய தாக்கரேவுக்குத் தொடர்பு? ஷிண்டே அணி சொல்வது என்ன?

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் செயலாளராக இருந்த திஷா சாலியன், மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டா... மேலும் பார்க்க

"திமுக மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை" - மருத்துவர் கிருஷ்ணசாமி விமர்சனம்

தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (மார்ச் 27) உள் இட ஒதுக்கீடு மற்றும் மாஞ்சோலை மலையக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.இதில் புதிய தமிழகம் கட்சியின் தலை... மேலும் பார்க்க

'தமிழகக் கல்வி நிதியை நிறுத்தி வைப்பது நியாயமில்லை' - நிதியை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக அரசு அதனை ஏற்... மேலும் பார்க்க