செய்திகள் :

பயப்பட வேண்டிய அவசியமில்லை; அணிக்கு ஆதரவாக பேசிய அஜிங்க்யா ரஹானே!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இதையும் படிக்க: விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டி: நினைவுப் பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்!

பயப்பட வேண்டிய அவசியமில்லை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில், முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்த சீசனில் இது எங்களுடைய முதல் போட்டி. எங்களது அணியில் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. சில விஷயங்களை சுட்டிக்காட்டி நான் பேச விரும்பவில்லை. ஒரு அணியாக நாங்கள் சில இடங்களில் நன்றாக செயல்பட்டதாக நினைக்கிறேன். ஒரு அணியாகவும், தனிநபராகவும் சில இடங்களில் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

இதையும் படிக்க:ஐபிஎல் 2025: லக்னௌ அணியில் இணைந்த ஷர்துல் தாக்குர்!

கடந்த காலங்களில் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அதனால், அவர்களுக்கு ஆதரவாகவே நான் பேசப் போகிறேன். அவர்களது சிறப்பான ஆட்டத்தை முயற்சி செய்தனர். அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. இதுபோன்ற பல சூழல்களில் அணிக்காக அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களது முயற்சி சரியாக வேலை செய்தால், அது உண்மையில் சிறப்பாக இருக்கும். இது மிகவும் நீண்ட தொடர். ஒரு அணியாக ஒவ்வொரு தனிநபருக்கும் எங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும் என்றார்.

மார்ச் 26 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் அடுத்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி குவாஹாட்டியில் நடைபெறுகிறது.

மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி: தில்லி கேபிடல்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைப் போட்டியில... மேலும் பார்க்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ர... மேலும் பார்க்க

மின்னல் வேகம், கூர்மையான பார்வை; எம்.எஸ்.தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹைடன்!

எம்.எஸ்.தோனி தனது மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் சூர்யகுமார் யாதவை ஆட்டமிழக்கச் செய்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத... மேலும் பார்க்க

லக்னௌக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு; அணியில் கே.எல்.ராகுல் இல்லை!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது எப்படி? என்ன சொல்கிறார் ரச்சின் ரவீந்திரா?

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று முன் தினம் (மார்ச் 22) தொடங்கியது. ஐபிஎல் தொடர... மேலும் பார்க்க

ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று முன் தினம் (மார்ச் 22) தொடங்கியது. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ... மேலும் பார்க்க