தவெக விஜய்: "2026-ல் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்; ஆனால்..." ...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் புதிய சாதனை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 44 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.
சஞ்சு சாம்சன் சாதனை
நேற்றையப் போட்டியில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்தது.
Sanju V Samson. In 4K pic.twitter.com/CV0ZMOV3Rt
— Rajasthan Royals (@rajasthanroyals) March 24, 2025
அந்த அணியில் துருவ் ஜுரெல் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 66 ரன்கள் எடுத்தார். 66 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 4,000 ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் சாதனை படைத்துள்ளார்.
இதுவரை 168 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 4,485 ரன்கள் குவித்துள்ளார். அதில் 26 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் அவரது தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் 119 என்பது குறிப்பிடத்தக்கது.