ஷர்துல் தாக்குர் 100*..! ஐபிஎல்லில் புதிய சாதனை!
ஐபிஎல் தொடரில் லக்னௌ வீரர் ஷர்துல் தாக்குர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஹைதராபாத் - லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
4 விக்கெட்டுகள் எடுத்த ஷர்துல் தாக்குர் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
சென்னை, லக்னௌ அணிக்காக விளையாடியுள்ள ஷர்துல் தாக்குர் கடந்த நவம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை ஆகாமல் போனார்.
மேலும், லக்னௌ வீரர் மோஷின் கான் காயத்தால் விலகிய நிலையில் மீண்டும் அணிக்குள் இணைந்த தாக்குர் மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணி பந்துவீச்சாளர்களுக்கான உதா நிற தொப்பியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.