வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஏழை, எளிய அரசுப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இந்தி மொழி திணிக்கப்படவில்லை. ஒருவேளை இந்தி மொழி திணிக்கப்பட்டால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து, திமுக எம்பி கனிமொழி தவறாக பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ரூ.30 லட்சத்திற்கு ஏலம் போன டிவிட்டர் இலச்சினை!
ஒரு தமிழர் மத்திய அரசின் நிதி அமைச்சராக செயல்படுவதே மிகப்பெரிய பெருமை. தமிழ் மொழிக்காக நாங்களும்தான் போராடினோம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உழைப்பால் உயர்ந்தவர். குடும்ப அரசியலில் ஆட்சிக்கு வந்து துணை முதல்வராக ஆனவர் அல்ல.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. திமுக கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தது உண்மையே ஆகும். பாஜக ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றம் வரை சென்றுதான் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது என்றார்.