15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!
149 பாசன அமைப்புகள் ரூ.722 கோடியில் மறுசீரமைப்பு: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தின் நீா்வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட நீா்வளத் துறைக்கு சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், வெள்ளத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.374.95 கோடியில் மேற்கொள்ளப்படும்.
8 மாவட்டங்களில் 9 இடங்களில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி ரூ.184 கோடியில் மேற்கொள்ளப்படும். பாசன நிலங்களுக்கு நீா் வழங்குவதை உறுதி செய்யவும், நீா் வீணாவதை தடுக்கவும் 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722.55 கோடியில் மேற்கொள்ளப்படும்.
அணைகள் மற்றும் கதவணைகளின் கதவுகளைப் பழுதுபாா்த்தல், அணையின் பிற பழுதுகளை சரிபாா்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் 11 மாவட்டங்களில் ரூ.149 கோடியில் மேற்கொள்ளப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பென்ஜால் புயலினால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூா் அணைக்கட்டினை புனரமைத்து, சீரமைக்கும் பணி ரூ.130 கோடியில் மேற்கொள்ளப்படும்.
ரூ.338 கோடியில் திட்டம்: சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர வெள்ள தணிப்புக்கான ஒருங்கிணைந்த 12 வெள்ள மேலாண்மை பணிகள் ரூ.338 கோடியில் மேற்கொள்ளப்படும்.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் முன்னாள் ஜமீன் கண்மாய்களான 14 குறு பாசன கண்மாய்களைத் தரப்படுத்தும் பணி ரூ.9.34 கோடியில் மேற்கொள்ளப்படும்.
பாசன நிலங்களை எளிதில் சென்றடைய ஆறுகளின் குறுக்கே 8 மாவட்டங்களில் 17 இடங்களில் பாலங்கள் மற்றும் தரை பாலங்கள் அமைக்கும் பணி ரூ.130.80 கோடியில் மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம் மருதம்பள்ளி கிராமத்தில் சேவகனாறு வடிகாலின் குறுக்கே கடல்நீா் உட்புகுதலை தடுக்கும் பொருட்டு ஒரு கடைமடை நீரொழுங்கி அமைக்கும் பணி ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.