எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு `அவசர’ பயணம் - பரபரக்கும் அரசியல் களம்
சரவெடியைத் தொடங்கிய சன்ரைசர்ஸ்..! 6 ஓவர்களில் 94 ரன்கள்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 94/1 ரன்கள் குவித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார்கள்.
தீக்ஷனா அபிஷேக் விக்கெட்டை வீழ்த்தினார். ஆர்ச்சர் ஓவரில் டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடினார்.
டிராவிஸ் ஹெட் - 46
இஷான் கிஷன் - 20
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 ஓவர்களுக்கு 125 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.