செய்திகள் :

விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டி: நினைவுப் பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்!

post image

கொல்கத்தா: இந்தியன் ப்ரீமியர் லீக்(ஐபிஎல்) 18-ஆவது கிரிக்கெட் தொடரானது (ஐபிஎல் 2025) இன்று(மார்ச் 22) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, இரவு நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்துவீசி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இன்றைய போட்டியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டியாகும்.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 18 ஆண்டுகளாக அதன் ஒவ்வொரு தொடரிலும் தவறாது விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடக்கவிழாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது.

விராட் கோலியின் கிரிக்கெட் சீருடையில் ‘18’ என்ற எண்ணே குறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், அதனை மையப்படுத்தி, இன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதில் ‘18’ என்ற எண் பெரிதாக குறிக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை நிகழ்த்திய ஆர்ச்சர்!

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதல் 6 ஓவரி... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்... மேலும் பார்க்க

இஷான் கிஷன் சதம்: ஐபிஎல் வரலாற்றில் 2-ஆவது அதிகபட்ச ரன்களை குவித்த சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் 6 ... மேலும் பார்க்க

சரவெடியைத் தொடங்கிய சன்ரைசர்ஸ்..! 6 ஓவர்களில் 94 ரன்கள்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.பவர் ... மேலும் பார்க்க

பயப்பட வேண்டிய அவசியமில்லை; அணிக்கு ஆதரவாக பேசிய அஜிங்க்யா ரஹானே!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாக ... மேலும் பார்க்க

சிஎஸ்கே ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஆப்கன் வீரர்!

ஆப்கன் வீரர் நூர் அஹமது சிஎஸ்கே ரசிகர்களிடம் தங்களது அணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு பேசியுள்ளார். சிஎஸ்கே அணியில் முதல்முறையாக விளையாடும் நூர் அஹமது சிறப்பான சுழல் பந்துவிச்சாளராக இருக்கிறார். சேப்பாக்க... மேலும் பார்க்க