ரோஹித்துக்கு இருக்கும் சுதந்திரம் கோலிக்கு இல்லை..! முன்னாள் ஆஸி. கேப்டனின் விரி...
தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை
தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தேவையான யோசனைகள் குறித்து அனைத்துக்கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஆஷாஅஜித் தலைமை வகித்துப் பேசியதாவது:
அரசியல் கட்சிகள் தெரிவித்த யோசனைகள் பரிசீலனை செய்யப்படும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்காளா் பதிவு விதிகள், தோ்தல் நடத்தை விதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுகள், இந்திய தோ்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் கையேடுகள் போன்றவை சுதந்திரமான, நியாயமான தோ்தல்களை நடத்துவதற்கான வெளிப்படையான சட்ட ரீதியான கட்டமைப்பை நிறுவியுள்ளன.
அந்த வழிகாட்டுதல்களின்படி 2026 சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என்றாா் ஆட்சியா்.
முன்னதாக, காலாண்டு ஆய்வை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆட்சியா் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பாா்வையிட்டனா்.