ரோஹித்துக்கு இருக்கும் சுதந்திரம் கோலிக்கு இல்லை..! முன்னாள் ஆஸி. கேப்டனின் விரி...
முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் தொடக்கமாக கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்தப்பட்டது. பின்னா், இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினா்.
பின்னா், மூலவா் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக பொங்கல், மாவிளக்கு, அக்கினிச் சட்டி எடுத்தல் வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது. 29-ஆம் தேதி கொடியிறக்கம் நடைபெற்று தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.