சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!
குடிநீர் கட்டணம் வசூலுக்குச் சென்ற அலுவலர்கள் சிறை பிடிப்பு
சேலம்: ஆத்தூர் அருகே குடிநீர் கட்டண வரி வசூலுக்குச் சென்ற அலுவலர்களை முற்றுகையிட்டு மக்கள் சனிக்கிழமை சிறை பிடித்தனா்.
முறையான குடிநீர் வழங்காமல் வரி மட்டும் எப்படி கேட்கலாம் என மக்கள் கேட்டபோது,அலுவலர்கள் தகாத வார்த்தையில் பேசியதாக கூறி சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 10 ஆவது வார்டு வடக்கு தலைநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ள மக்களிடம் குடிநீர் கட்டண வரி வசூல் செய்வதற்காக நகராட்சி பொறியாளர் ஜெயமாலினி மற்றும் பொதுப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் சென்றனர்.அப்போது குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தங்கள் பகுதிக்கு 18 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும்,அவையும் முறையாக வழங்கப்படாத நிலையில், குடிநீர் கட்டணம் மட்டும் எப்படி வசூலிக்கலாம் என மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு! - டி.கே. சிவகுமார் பேச்சு
அப்போது அலுவலர்கள் மக்களிடம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகளை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை அலுவர்கள் தங்களது செல்போன்களில் விடியோ பதிவு செய்தனர். இதையடுத்து மக்களும் தங்களது செல்போன்களில் விடியோ பதிவு செய்ததை அலுவலர்கள் தட்டிவிட்டதால் செல்போன் உடைந்தது. வாக்குவாதம் தீவிரமடைந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. நகராட்சி அலுவலர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.