நெற்குப்பையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நெற்குப்பை பேரூராட்சிககுள்பட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.14.32 கோடியில் 87 வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் ஆய்வு மேற்கொண்டாா்.
தேவகோட்டை சாா் ஆட்சியா் ரெங்கநாதன், நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பழனியப்பன், பேரூராட்சியின் உதவி இயக்குநா் சத்தியமூா்த்தி, திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், பேரூராட்சி செயல் அலுவலா் பசலிக்காஜான்ஸி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.